நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பு..
வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் சமுத்திரகனி இளம் நடிகர் வீரா மற்றும் பலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்கிறார்.
இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் அஜித்தின் 61 வது திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார். வலிமை படத்தில் நடந்த சில தவறுகள் இந்த படத்தில் நடக்காமலிருக்க வினோத்துக்கு ஃபுல் பர்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது அவரது எண்ணம் போல் இந்த படத்தை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டதால் வினோத் தீவிரமான படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் கொள்ளை சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரியவருகிறது இந்த படத்திற்கு ஏற்ற மாதிரி இப்போது புதிய அவதாரத்தில் செம சூப்பராக இருக்கிறார் அஜித் அந்த புகைப்படங்கள் கூட அவ்வபோது வெளிவந்த வண்ணமிருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் பிரபல இயக்குனர் இணைந்துள்ளார் என்ற தகவல் வருகிறது.
அஜித்தை வைத்து சிட்டிசன் என்ற படத்தை இயக்கிய சரவண சுப்பையா AK 61 படத்தில் அஜித்துடன் கை கோர்த்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன இவர் இந்த படத்தில் இணைந்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.