ஜெயிச்சிட்டேன்னு ஆடவும் மாட்டார் தோத்துட்டன்னு துவண்டு போக மாட்டார் அஜித் குறித்து முன்னணி நடிகர்

Ajith

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் அஜித்குமார். இவர் அடுத்தடுத்து படம் பண்ணி வருகிறார். துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்கயுள்ளார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருளைச் செலவில் தயாரிக்க இருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கி அடுத்த வருடம் ஜனவரியில் முடியும் என சொல்லப்படுகிறது அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், ஹீமா குரேஷி  போன்றவர்களையும் நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி பல சினிமா பிரபலங்கள் பேசி வருவது வைரல் ஆகி வருகிறது. அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் மலையாள டாப் நடிகர் பிரித்விராஜ் அஜித் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் சூர்யாவின் புது வீடு கிரகப்பிரசவேசம் நிகழ்ச்சியில் அஜித்தை மிக நெருக்கமாக சந்தித்தேன்.

அப்பொழுது அவர் எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக என்னிடம் பேசியது வியக்க வைத்தது. அவரது படங்கள் பெரிய வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் சரி அதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். அதற்கான காரணம் அன்று நான் உணர்ந்தேன்.

prithviraj
prithviraj

அஜித் பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் எல்லோரிடமும் சிம்பிளாக எல்லோரிடம் இயல்பாக பழகுவதிலும் பேசுவதிலும் அஜித் தனி ரகம் அவரிடமிருந்து பல நல்ல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் மலையாள டாப் நடிகர் பிருத்திவிராஜ் பேசி உள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.