அஜித் பட இயக்குனரை வளைத்து போட்ட உலகநாயகன்..! புதிய கூட்டணி கன்ஃபார்ம்..

kamal
kamal

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கமல். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஏற்கனவே இவர் நடித்து பாதியில் விட்ட திரைப்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. இருப்பினும் எந்த இயக்குனர் சொல்லும் கதை தனக்கு ரொம்ப பிடித்து இருக்கோ அவருடன் கைகோர்க்கலாம் என கமல் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் வருகின்ற செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கப்பட இருப்பதாக அண்மையில் நடிகை காஜல் அகர்வால் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து தேவர்மகன் 2 சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் கமல் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் விக்ரம் படத்திற்கு முன்பாகவே உலகநாயகன் கமலஹாசன் பல்வேறு இயக்குனருடன் கதை கேட்டுள்ளாராம் அவர்களில் ஒருவராக அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் ஹச் வினோத்திடம்  ஏற்கனவே ஒரு கதையை கேட்டுள்ளார். அந்த கதை முழுக்க முழுக்க ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட கதை என சொல்ல படுகிறது.

ஏற்கனவே கமலுக்கு அந்த கதை பிடித்து போய் ஓகே எல்லாம் சொல்லி இருந்தாராம். ஆனால் அதற்குள் விக்ரம் படத்தில் அவர் நடிக்கப் போக மறு பக்கமோ ஹச் வினோத் அஜித்தை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார் தற்பொழுது இருவரும் இருக்கின்ற படங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு இணைவார்கள் என தெரிய வருகிறது.

அஜித்தை வைத்து AK 61 படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து விட்டால் கமலும் ஹெச் வினோத்தும் இணையும் பாடத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என தெரிய வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..