Ajith : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வருபவர் ஏஎல் விஜய் இவர் முதலில் அஜித்தை வைத்து கிரீடம் என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதன் பிறகு இவர் எடுத்த பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம்..
இது என்ன மாயம், வனமகன் என அனைத்து படமே வெற்றி படங்கள்தான் இப்போ கைவசம் அச்சம் என்பது இல்லையே படத்தை இயக்கி வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஏ.எல். விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்குமார் பற்றி பேசி உள்ளார் அது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
நான் இப்பொழுது இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் நடிகர் அஜித் தான். அவருடைய கிரீடம் படத்தை இயக்கி நான் அறிமுகம் ஆனேன். அவர் இல்லை என்றால் இந்த இடத்தில் இன்று நான் இல்லை என கூறினார். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என் குடும்பத்தினர்.
அவர்களைப் போலவே அஜித்தும் எனக்கு ரொம்பவும் முக்கியமானவர். அவர் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட.. நான் அஜித்தை சந்தித்து கதை சொல்லப் போனேன் ஆனால் அவரோ முதலில் கதை எல்லாம் சொல்ல வேண்டாம் என கை கொடுத்து முதலில் சாப்பிட வைத்தார் பிறகு கதை பற்றி நாங்கள் பேசினோம் எனக் கூறினார்.
மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என தொகுப்பாளர் கேட்க நிச்சயமாக காலம் அமையும் மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் பண்ணுவேன் என அவர் கூறினார் இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
𝐈 𝐚𝐦 𝐡𝐞𝐫𝐞 𝐭𝐨𝐝𝐚𝐲, 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 #Ajith 𝐬𝐢𝐫, 𝐭𝐫𝐮𝐬𝐭𝐞𝐝 𝐦𝐞 𝐚𝐧𝐝 𝐠𝐚𝐯𝐞 𝐦𝐞 𝐚 𝐝𝐚𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐦𝐲 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐟𝐢𝐥𝐦.
𝑨𝒍𝒘𝒂𝒚𝒔 𝒗𝒆𝒓𝒚 𝒗𝒆𝒓𝒚 𝑺𝒑𝒆𝒄𝒊𝒂𝒍 𝑭𝒐𝒓 𝑴𝒆 & 𝑶𝒗𝒆𝒓𝒏𝒊𝒈𝒉𝒕 𝑰 𝒈𝒐𝒕 𝒓𝒆𝒄𝒐𝒈𝒏𝒊𝒔𝒆𝒅.
– Dr ALVijay… pic.twitter.com/H4pfKjYMVP
— MASS AJITH (@MASSAJITH) October 25, 2023