தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மைக்காலமாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் சிறந்த படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் சூப்பராக நடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாக்கலமாக ரிலீஸ் ஆகிறது.
துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரி கதை என்பதால் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது அதேசமயம் இந்த படத்தில் செண்டிமெண்ட் சீன்களும் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸையும் கவர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்..
இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ஸ் மூவி நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. துணிவு படம் வெளிவருவதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க..
அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க திட்டம் போட்டு இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் – விஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் அன்றிலிருந்து இப்பொழுது வரையுமே இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவது மற்றும் சந்தோஷமாக இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது கூட நடிகர் அஜித்குமார் ஷாலினியை உட்கார வைத்து அவர் நின்று கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் எப்பொழுதுமே பெண்களுக்கு மரியாதை கொடுப்பார் அதை இந்த புகைப்படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் என கூறிய கமெண்ட் அடித்தும் வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.