ஆண்ட்டி ஆன பிறகும் அல்டிமேட் ஸ்டார் போல் பைக்கில் அலப்பறை கொடுக்கும் அஜித் பட நடிகை..!

kanika-01

தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலாக கால் தடம் பதித்தவர் தான் நடிகை கனிகா. இவ்வாறு இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் தல அஜித் நடிப்பில் வெளியான வரலாறு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் மேலும் இத் திரைப்படம் வசூல் ரீதியாக சாதிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இந்நிலையில் நமது நடிகை ராதா கிருஷ்ணன் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிய நமது கனிகா தற்போது ஒரு மகனுக்கு தாய் ஆகி உள்ளார்.

இவர் திருமணத்திற்குப் பிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து கனிகா சமீபத்தில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் நடிகை கனிகா தற்போது இரண்டு மலையாளத் திரைப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாகவும் மேலும் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்களை விட அதிக அளவு பைக் ரேஸில் ஆர்வம் உள்ளவர் தல அஜித் தான் அந்த வகையில் தற்போது நடிகை கனகாவின் நீண்ட ஆசையும் பைக் ஓட்ட வேண்டும் என்பதுதானம்.  இதற்காக தன்னுள் இருந்த பயத்தை நீக்கி விட்டு தற்போது பைக் ஓட்டி கனிகா தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார்

kanika-02
kanika-02