விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆனார் நடிகர் ஜெய். பின் படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் சென்னை 600028, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வறியவன் என பல படங்கள் இருக்கின்றன ஆனால் அவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது சென்னை 600028, சுப்பிரமணியம் ஆகிய படங்கள் தான் பார்க்கப்படுகிறார்.
குறிப்பாக சென்னை 600028 திரைப்படமும் அவரது கேரியரில் மறக்க முடியாத படம். அந்த படத்தின் போது ஒரு சிறப்பான சம்பவம் நடந்துள்ளது அதாவது இந்த திரைப்படம் பலருக்கும் பிடித்த திரைப்படம் அந்த வகையில் அஜித்துக்கும் இந்த படம் ரொம்ப பிடித்ததாம். அஜித்தும் வெங்கட்பிரபுவும் நெருங்கிய நண்பர்கள் அதன் மூலமாக சென்னை 600028 படத்தில் நடித்த 10 பேரும் அஜித்திற்கு ரொம்ப நெருங்கியவர்களாக மாறினார்.
சென்னை 600028 படத்தை தொடர்ந்து ஜெய்க்கு பட பட வாய்ப்புகள் குவிய தொடங்கின அப்போது நடிகர் ஜெய் தனக்கு வந்த படவாய்ப்புகளில் முக்கிய மூன்று கதைகளை அஜித்திடம் சொல்லி இது மூன்றில் ஒரு கதையை செலக்ட் பண்ணி சொல்லுங்கள் என கேட்டுள்ளார் .
அதற்கு அஜித் கவனமாக அந்த கதையை கேட்டுவிட்டு சுப்பிரமணியபுரத்தில் சிறப்பாக இருக்கும் என சொல்லி தேர்வு செய்து கொடுத்தாராம். பின்பு ஜெய் இந்த படத்தில் நடித்து படமும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் அஜித் சொன்னதுபோலவே படம் ஜெய்க்கு ஒரு திருப்புமுனை படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.