நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் துணிவு திரைப்படமும் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி நடை கண்டு வருகிறது.
தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகள் மற்ற மாநிலங்களிலும் இந்த படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது. இதுவரை மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருக்கிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. துணிவு பட தயாரிப்பாளருக்கு இதுவரை 20 கோடிக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளதாம்.
இதுவே துணிவு திரைப்படத்திற்கு மாபெரும் வெற்றி என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் குறித்து பிரபல துணிவு பட நடிகர் பிரேம் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது.. நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு மனைவி ஷாலினி உடன் அஜித்..
காரில் வந்து இறங்கிய பொழுது அவரை திடீரென பத்திரிகையாளர்கள் மற்றும் சிகர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர் காரிலிருந்து இறங்கி அந்தப் பக்கம் சென்று மனைவிக்காக காரை திறந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.. உண்மையிலேயே இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் என்றும் அதன் பிறகு தன்னுடைய மனைவி ஒருநாள்..
அஜித்தை பார்ப்பதற்கு வெளியூரிலிருந்து வருவதாக சொன்னார். அதை நான் அஜித்திடம் சொன்ன பொழுது அவங்க எப்போ வருவாங்க.. பத்திரமா வந்துருவாங்களா.. என அடிக்கடி தன்னிடம் வந்து கேட்டதாகவும் இதெல்லாம் நினைச்சு பார்த்தால் தனக்கு ரொம்ப பெருமையாக இருக்கும் எனவும் உண்மையில் கேரிங் விஷயத்தில் அஜித் சாரை அடித்துக் கொள்ள யாருமே கிடையாது என பெருமையுடன் பேசி முடித்தார் நடிகர் பிரேம்..