பைக் போட்டியில் சாகசம் செய்யும் தல அஜித்.! இணையத்தில் தாறுமாறாக வைரலாகும் அவரது புதிய பைக் ஸ்டண்ட் புகைப்படங்கள்.!

thala-ajith

தமிழ் திரையுலகில் மிகவும் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தான் தல அஜித் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது உண்டு அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கூட நாம் அடிக்கடி பார்க்கலாம் அந்த அளவிற்கு தல அஜித்தின் இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.மேலும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தது.

thala ajith
thala ajith

அங்கு பைக் ஸ்டண்ட் காட்சிகள் படமாக எடுக்கப்பட்டு வந்தது அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பைக் ஸ்டண்ட் புகைப்படங்களை கூட நாம் சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்திருக்கலாம் பொதுவாகவே தல அஜித்திற்கு பைக் மற்றும்  கார் ரேஸில் கலக்குவது மிகவும் பிடிக்கும்.

ajith

மங்காத்தா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித் பைக் சாகசத்தில் இந்த திரைப்படத்தில் மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இதனிடையே அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் வரை பைக் ரைட் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் BMW பைக் Event ஒன்றில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith

ஆம் தல அஜித்திற்கு பைக் என்றால் பிடிக்கும் என்பதை அவர் பல விஷயங்களில் வெளிப்படுத்துவார் அந்த வகையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு மிகவும் அசத்தலாக சாகசம் செய்துள்ளார்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த தல அஜித் ரசிகர்கள் பலரும் தல அஜித்துக்கு வயதானாலும் அவரது இளமை இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பதை அவர் செய்யும் செயல்களை வைத்தே நாம் பார்க்கலாம் என கூறிவருகிறார்கள்.