இந்திய அளவில் டாப் 10 நடிகர்கள் லிஸ்டில் 6 வது இடத்தில் அஜித், தளபதிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா.?

ajith vijay
ajith vijay

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நடிகர்களுக்கும் பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் ஒவ்வொரு நடிகர்களும் மற்ற நடிகர்களுக்கு சளைத்தவர் கிடையாது என தங்களுடைய படத்தின் முழு நிரூபித்து வருகிறார்கள். அதிலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை  நடிகர்களுக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.

அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி,  ரஜினி கமல், விஜய் அஜித், விக்ரம் சூர்யா, சிம்பு தனுஷ், என கூறிக் கொண்டே போகலாம் தங்களுடைய படத்தின் மூலம் போட்டியை நிரூபித்து வருகிறார்கள்.. அதேபோல் இந்திய அளவில் பாலிவுட் சினிமா நடிகர்களின் ஆதிக்கம் குறைந்து தென்னிந்திய சினிமா நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

அதேபோல் பாலிவுட் நடிகர்களின் திரைப்படத்தின் வசூலுக்கு இணையாக தென் இந்திய நடிகர்களின் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது அந்த வகையில் பாகுபலி கே ஜி எஃப் பொன்னியின் செல்வம் விக்ரம் என பல திரைப்படங்களை கூறிக் கொண்டே செல்லலாம்.

இந்த நிலையில் தற்போது ORMAX  நிறுவனம் டாப் 10 நடிகரின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது இந்த லிஸ்டில் ஐந்து தெலுங்கு நடிகர்கள் மூன்று தமிழ் நடிகர்கள் ஒரே ஒரு பாலிவுட் நடிகர் என டாப் டென் லிஸ்ட்டை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் முதலிடத்தில் எந்த நடிகர் இருக்கிறார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்  அதிக ரேட்டிங் பெற்று முதல் இடத்தில்  தளபதி விஜய் இருக்கிறார்.

நீண்ட காலமாக தளபதி விஜயின் இடத்தை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. மூன்றாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர் நான்காவது இடத்தில் அல்லு அர்ஜுன் ஐந்தாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர் ஆறாவது இடத்தில் அஜித்குமார், ஏழாவது இடத்தில் சூர்யா எட்டாவது இடத்தில் யாஷ் ஒன்பதாவது இடத்தில் ராம்சரண் பத்தாவது இடத்தில் மகேஷ்பாபு.

இப்படி ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய ரேட்டிங்கை பொருத்து இடத்தைப் பிடித்துள்ளார்கள்.