விடாமுயற்சி படத்திற்காக தயாராகும் அஜித்.? அனைத்துக்கும் ஓகே சொன்ன மகிழ் திருமேனி

ajith
ajith

துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இதற்கான அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இருப்பினும் எப்பொழுது ஷூட்டிங் தொடங்கும் என்பதை இதுவரை படக்குழு சொல்லாமல் சைலண்டாக வைத்திருக்கிறது.

இதனால் அஜித் இந்தியாவை சுற்றி பைக் ரைடு செய்து வருகிறார் வெகு விரைவிலேயே படத்தின் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் சில தகவல்கள் இணையதள பக்கங்களில் உலா வருகின்றன. அதாவது அஜித் தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு படத்திலும் அஜித்தின் ஸ்டைலும் மாறிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் துணிவு திரைப்படத்தில் அஜித் கெட்ட பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் விடாமுயற்சி   படத்திலும் ஒரு வித்தியாசமான லுக்கில் நடிக்க அஜித் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்கு மகிழ் திருமேனியும் ஓகே சொல்லி உள்ளாராம்..

அதோடு மட்டுமல்லாமல் அஜித் இந்த படத்தில் இன்னும் சில தரமான சம்பவங்களையும் செய்ய உள்ளார் விடாமுயற்சி   படத்தில் அஜித்  இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் எனவே ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அஜித்தின் லுக் மாறுபட்டு இருக்கும் என கூறப்படுகிறது

இதனால் விடாமுயற்சி திரைப்படம் அஜித்திற்கும் சரி அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஒரு  படமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது அதற்கான வேலைகளில் தான் தற்போது அஜித் களமிறங்கி இருக்கிறார். வெகு விரைவிலேயே விடா முயற்சி படத்திற்கான அஜித்தின் கெட்டப் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.