அந்த அஜித் இப்ப இல்ல.. காச தண்ணி போல செலவு செய்வாரு..பழைய நினைவுகளை பகரும் பிரபல நடிகர்.

AJITH
AJITH

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் அமராவதி படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதல் மன்னன், காதல் கோட்டை, ஆசை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருந்த அஜித் எஸ் ஜே சூர்யாவுடன் கூட்டணி அமைத்து நடித்த வாலி திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இதுவரை காதல் மன்னனாக ஓடிக்கொண்டிருந்த அஜித் வாலி படத்தில் தனது வில்லத்தனத்தை காட்டி இருந்தார் இதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படத்திற்கு பிறகு காதல் மன்னனாக ஓடிய அஜித் திடீரென தனது டிராக்கை மாத்தி.. தொடர்ந்து ஆக்சன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்.

இப்பொழுது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் மேலும் தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 90 கோடி முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்துடன் ஆரம்ப காலகட்டங்களில் படங்களில் நடித்த மாரிமுத்து அஜித் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது..

அஜித் ஆரம்பத்தில் குறைந்த சம்பளம் வாங்கினாலும் அதிகமாக செலவு செய்வார் ஆம் யூனிட்டில் இருக்கும் பலருக்கும் சாப்பாடு வாங்கி தருவார், விருந்து வைப்பார் உதவி செய்வார் ஆனால் தற்பொழுது அந்த குணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.. ஷாலினியை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு குடும்ப பொறுப்புகள் வந்ததால்..

தன்னை மாற்றி இருக்கலாம் ஆனால் தற்பொழுதும் பல செய்திகள் சொல்லப்படுகிறது அதாவது அஜித் யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருவதாக கூறுகின்றனர் என அவர் கூறினார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுதீ போல பரவி வருகிறது.