தமிழ் சினிமா உலகில் காமெடி, காதல் சம்பந்தப்பட்ட படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் நயன்தாராவின் காதல் என்பது குறிப்பிடத்தக்கது இவர் படங்களையும் தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார்.
மேலும் பாடல்களையும் பாடி அசத்துகிறார். இதனால் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வளர்ந்துள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி தற்போது சூப்பர் ஹிட் அடித்துள்ளது நல்லதொரு வசூல் வேட்டையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து சமந்தா, நயன்தாரா மற்றும் பலர் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் சிறப்பாக இருப்பதால் படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது இதற்கான வேலைகளில் அடுத்து இறங்க உள்ளாராம் இந்த நிலையில் விஜய் சேதுபதி அஜீத்தின் 62வது திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் தீயாய் பரவுகின்றன.
இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் நிச்சயமாக எனது அடுத்த படமான அஜித்தின் 62வது திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வில்லை அவரை நான் எனது படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் வில்லனாக இல்லை என மறுத்துள்ளார். அஜித்தின் 62வது படம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு ட்ரீட்டாக கொடுக்க விக்னேஷ் சிவன் ரெடியாக இருக்கிறாராம்.