தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிக் கொண்டவர் அஜித்.
அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் காதல் மன்னன் இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக், எம்எஸ் விஸ்வநாதன் ,கரன், கனல்கண்ணன், தாமு ,நித்தியா, க்ரிஷ் கருணாத் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது இத்திரைப்படத்தின் மூலம் பல பெண் ரசிகர்களை கவர்ந்தார் அஜித். இப்படத்தின் மூலம் அவருக்கு காதல் மன்னன் என்ற புனைப் பெயரும் கிடைத்தது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் திலோத்தமா இவர் உண்மை பெயர் மானு. இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர் அதனால் கதக் ,பரத நாட்டியம் மற்றும் மணிபூர் ஆகிய பல கலைகளை கற்று சிறந்து விளங்கினார் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார் அப்படி ஒரு மேடையில் தான் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் பார்த்து தனது நண்பரும் இயக்குனருமான சரவணனிடம் மானுவை அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலமாகவே அவருக்கு காதல் மன்னன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு 16 வயது மட்டுமே. இப்படத்தினை தொடர்ந்து அவர் வேறு எந்த பெரிய படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய பேட்டி ஒன்றில் திலோத்தமா (மானு) இப்படத்தைப் பற்றிய மேலும் அஜித்தை பற்றியும் சில விஷயங்களை கூறியுள்ளார். காதல் மன்னன் படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவமாக இருந்தது இப்படத்தில் என்னைவிட பெரிய பெரிய பிரபலங்கள் நடித்திருந்தனர் அவர்களுடன் இணைந்து நடித்தது நடித்தற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனவும் கூறினார்.
குறிப்பாக அஜித் அவர்களுடன் நடித்ததற்கு நான் மிகவும் புண்ணியம் செய்திருக்கணும் என கூறினார் 22 ஆண்டுகள் கழித்தும் அந்தப்படம் இன்னும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது என்பது எனக்கு தெரியும் அதுபோல அவர்கள் மனதிலும் நான் இருக்கிறேன். இந்த படம் தனக்கு முதல் படம் என்பதால் தல அஜித் அவர்கள் என்னை சௌகரியமாக வைத்துக்கொண்டார் அதனால் தான் தன்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது என தெரிவித்தார் மேலும் அஜித் அவர்கள் சிறந்த மனிதர் ,மிகவும் எளிமையாக பழகக்கூடியவர் என்பதால் எல்லோரும் பிடித்துப்போனவராக ஆக இருந்து வருகிறார் என தெரிவித்தார் மேலும் அவரது சிறப்பான குடும்பம் சிறப்பாக தன்னை பார்த்துக் கொண்டது என கூறி வாழ்த்தினார்.