தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் பல வருடங்கள் சூட்டிங் எடுக்கப்பட்ட ஒருவழியாக அண்மையில் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த வருடம் பொங்கலுக்கு வலிமை படம் திரை அரங்கில் வெளியாக இருக்கிறது. வலிமை படத்தை தவிர வேறு எந்த திரைப்படமும் பொங்கலுக்கு வராததால் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த திரைபடத்தை வாங்கி வருகின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்திகேயா இதுவரை ஹீரோ வில்லன் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த ஆர்எஸ் 100 படம் எதிர்பார்க்காத அளவிற்கு பேரையும், புகழையும் பெற்று தந்தன. அதன் காரணமாக இந்திய அளவில் இவரது பெயர் தீயை பரவியது மேலும் இவரது கட்டுக்கோப்பான உடல் வில்லன் ரோலுக்கு மிக கச்சிதமாக பொருந்தியதால் இவரை வலிமை திரைப்படத்தில் வில்லன் கதா பாத்திரத்தில் படக்குழு முனைப்பு காட்டியது.
ஒரு வழியாக வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனை அவரே அண்மையில் கூறியிருந்தார். வில்லன் கார்த்திகேயா பல வருடங்களாக காதலித்து வந்த கல்லூரி தோழியான லோஹிதாவை திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமணத்திற்கு அஜித் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வராமல் போனில் வாழ்த்து தெரிவித்தார் ஆனால் வில்லன் கார்த்திக்கேயாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அஜித் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு கார்த்திகேயா மற்றும் அவரது மனைவியை அழைத்து விருந்து கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.