அஜித்தின் முகத்தை பார்த்தாலே அவர் நல்லவர் என அனைவரும் கூறுவார்கள்.! பிக்பாஸ் நான்காவது சீசன் பிரபலம் ஓபன் டாக்.!

ajith-un-seen
ajith-un-seen

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் சண்டைக்காட்சி மற்றும் காதல் காட்சி என களை கட்டி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களுக்கிடையே சிம்மசொப்பனமாக இருப்பவர் சுரேஷ் சக்கரவர்த்தி, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடுவதைக் கண்டு பிடிப்பதற்குள் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார் அந்த அளவு மிகவும் தெளிவாக விளையாடி வருகிறார்.

அப்படி இருக்கும் வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி தல அஜித் பற்றி சுவாரசியமான தகவலை கூறியுள்ள வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

அதாவது அந்த வீடியோவில் சுரேஷ் அளித்துள்ள பேட்டியில் அஜித் கலந்துகொள்ள இருக்கும் நிகழ்ச்சியை தானே இயக்கி இருப்பதாகவும் அப்பொழுது அஜீத்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித்தும் சுரேஷும் ஒரே திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட தாகவும் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் அந்த வீடியோவில் பேசியதாவது அஜித் போன்ற நல்ல மனிதர் எங்கேயும் பார்க்க முடியாது அவர் ஒரு மகாத்மா அஜித் முகத்தைப் பார்த்தாலே எவரும் அவரை நல்லவர் என்று தான் கூறுவார்கள் என அஜித்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சுரேஷ் சக்கரவர்த்தி அஜித்தை பற்றி இது போல் பேசிய அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.