தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் சினிமா உலகில் அடுத்தடுத்த வெற்றி படத்தை எப்படி கொடுப்பது என யோசித்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே அதில் இருந்து மாறுபட்டு நடிப்பதையும் தாண்டி மீதி நேரங்களில் நம்பளால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிகாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அஜித்குமார் ஒரு பக்கம் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுக்க மறுபக்கம் மீதி நேரங்களில் தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ், சமைப்பது என பலவற்றிலும் தனது கவனத்தை செலுத்தி அசத்தி வருகிறார். இதனால் அவரது கனவு நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அவர் கொடுத்து வருகிறார்.
இப்பொழுது கூட நடிகர் அஜித் தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தற்பொழுது இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போய் இருக்கிறது இதனால் நாம் உட்கார்ந்து விட வேண்டாம் என கருதி லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார் தொடர்ந்து அதன் புகைப்படங்களை நாம் பார்த்து கண்டு களித்து வருகிறோம்.
இது போன்ற புகைப்படங்கள் வீடியோக்கள் ரசிகர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பதால் அவர்களும் புது புது விஷயங்களை கையில் எடுத்து அசத்துகின்றனர். இந்த நிலையில் அஜித்தை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா விலை உயர்ந்த சொகுசு பைக் ஒன்றுடன் அவர் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்திற்கு டஃப் கொடுப்பீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..