தென்னிந்திய முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த படத்தில் நடிகர் அஜித்தை தொடர்ந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார். மேலும் வெளிநாடுகளிலும் துணிவு திரைப்படத்திற்கான உரிமத்தை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகி மோதிக்கொள்ள உள்ளது எனவே பல வருடங்கள் கழித்து இவ்வாறு தல, தளபதி விஜயின் திரைப்படங்கள் போட்டிக்கு களமிறங்கி உள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இஙநிலையில் தொடர்ந்து நடிகர் அஜித்தின் புதிய திரை புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் அஜித் ஏராளமான ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி இருந்தது இப்படிப்பட்ட நிலையில் துணிவு திரைப்படத்தில் தாடி மீசை என வைத்திருந்த அஜித் எடுத்துவிட்டு புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கான லுக் இதுவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு நடிகர் அஜித்தின் கிளீன் சேவ் நியூ லுக் புகைப்படத்தினை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்குவதோடு மட்டுமல்லாமல் லைக்குகளும் குவிந்து வருகிறது. மேலும் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ள துணிவு திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டரை இயக்குனர் வினோத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.