ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நீண்ட வருடங்கள் கழித்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்.! ‘Ak 62’திரைப்படத்தின் அப்டேட்..

ajith
ajith

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். மேலும் இவருடைய திரைப்படங்கள் தமிழகளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. மேலும் இவரின் திரைப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலை தற்பொழுது நடிகர் அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தினை எச் வினோத் இயக்க மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. திரைப்படத்தினை போனிகபூர் அவர்கள் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மேலும் தற்காலிகமாக ‘ஏகே 61’என இந்த திரைப்படத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நீண்டு கொண்டே போவதால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடலாம் என படக் குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அஜித் விக்னேஷ் சிவனுடன் கைகோர்க்க உள்ளார்.

எனவே விக்னேஷ் சிவன் அஜித்துக்கு ஏற்றார் போல் வித்யாசமாக இருக்க வேண்டுமென தரமான கதை அம்சம் உள்ள கதையை உருவாகி வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 62 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் துவங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது ‘ஏகே 62’ திரைப்படத்தின் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில் மிகவும் ஜாலியாகவும் காமெடியை கதாபாத்திரத்திலும் அஜித் நடிக்க இருக்கிறாராம் ஏனென்றால் அஜித் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் பல ஆண்டுகள் கழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவன் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் நீண்ட வருடங்கள் கழித்து பழைய அஜித்தை பார்க்க போவதால் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.