தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் வித்தியாசமான மற்றும் ஆக்சன் திரைப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் வினோத். இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இரண்டாவதாக உருவான திரைப்படம் தான் வலிமை. படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் தற்போது கவர்ந்து இழுத்து உள்ளது.
இதனால் நாளுக்கு நாள் வசூல் பெருகிக் கொண்டே போகிறது. வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர் அனைவரும் அஜித்தை பற்றி நாம் கூறி கேட்டு வருகிறோம் அதுபோல அஜீத்தின் படத்தில் நடித்து தற்போது பிரபலமடைந்து உள்ளவர் தான் மலையாள நடிகர் துருவன்.
இப்படத்தில் வில்லன் கார்த்திகேயாவுக்கு அடியாளாக இவர் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து அவர் சொல்லியுள்ளார். முதலில் நான் ஹச். வினோத் திரைப்படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அஜித் சாருடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கப்போவது எனக்கு தெரியாதே தெரிந்தவுடன் எனக்கு டபுள் கொண்டாட்டமாக மாறியது.
அஜித் சார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் எளிமையானவர் மனிதநேயம் கொண்டவர் என சொல்லி இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் நான் நேரில் பார்த்து அசந்து போய்விட்டேன். நாம் நினைத்துப் பார்க்க கூடாத அளவிற்கு மிக எளிமையாக இருப்பார் ஒருமுறை படப்பிடிப்பில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன் இதை கவனித்த அஜித்.
உதவியாளரை உடனடியாக அழைத்து துருவனுக்கு சூடாக காப்பி கொடுக்க சொன்னதுடன் ஒரு ஹிட்டரை வரவழைத்து எனக்கு கொடுத்து குளிரைப் போக்கினார் அவர் இந்த அளவிற்கு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அவர் ஒரு மனிதரை மனிதராக பார்க்கிறார். நான் அவரிடம் ஷூட்டிங்கில் பணியாற்றி உள்ளேன் ஆனால் ஒரு தடவை கூட புகைப்படம் எடுக்கவில்லை என வருத்தத்துடன் கூறினார்.