செய்த உதவியை மறக்காத ஒரு மனிதர் அஜித்.! ஆச்சரியத்துடன் சொல்லும் தயாரிப்பாளர்

Ajith
Ajith

Producer help ajith not forget : தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக ஓடும் அஜித். துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் இந்த படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. அஜித் சினிமாவையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் இயக்குதல் என பலவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

இதனால் பல  ரசிகர்களுக்கு ரோல் மாடலாக அஜித் இருந்து வருகிறார் மேலும் தன்னால் முடிந்த உதவிகளையும் அஜித் செய்து வருகிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் அஜித்திடம் காசு இல்லாதபோது பலரும் வந்து உதவியுள்ளனர் அதற்கு கைமாறாக அவரும் பதிலுக்கு செய்திருக்கிறார். அப்படி ஒரு செய்தியை தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் கலைபுலி எஸ். தாணு இவர் அஜித்தை பற்றி பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை தாணு தான் தயாரித்தார் இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்க அஜித், தபு, மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ், ஏ ஆர் ரகுமான், மணிவண்ணன்..

ரகுவரன், ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, மலேசியா வாசுதேவன் என பல திரையபட்டாலும் நடித்திருந்தது படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை கலைபுலி எஸ். தாணு பகிர்ந்து உள்ளார் அவர் சொன்னது..

thanu
thanu

இயக்குனர் ராஜீவ் மேனன்  அஜித்தை சந்திக்க போனார் அந்த சமயத்தில் அஜித்துக்கு முதுகில் ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் உடனே அவர் எனக்கு போன் பண்ணி சார் கொஞ்சம் பணம் அனுப்புங்க சார் என உதவி கேட்டார். உடனே நான் பணம் அனுப்புனேன்.  அஜித்துக்கு ஆபரேஷன் தொடங்கி வெற்றிகரமாக முடிந்தது உடனே அஜித் என்னை நேரில் வந்து சந்தித்து நன்றி சொன்னார் இப்படி ஒரு உணர்வுபூர்வமான நடிகரை பார்த்ததே இல்லை என கூறினார்.