முதல் படத்திலேயே பிலிம் பேர் விருதை தட்டிச் சென்ற அஜித் பட இயக்குனர்..

ajith
ajith

இயக்குனர் விஷ்ணுவர்தன் அஜித்தின் ஆரம்பம் மற்றும் பில்லா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக மீண்டும் அஜித் உடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஷேர்ஷா என்ற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம் பேர் விருது பெற்றுள்ளார். திரில்லர் திரைப்படம் மற்றும் ஆக்சன் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன்.

மேலும் பாலிவுட்டில் இவர் இயக்கி வெளியான ஷேர்ஷா என்ற திரைப்படம் கார்கில் போரின் நாயகனை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த படம் தொடங்கும்போது நடிகர் அஜித் இயக்குனர் விஷ்ணுவர்தனை பாராட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அஜித்தின் நட்பும் பாராட்டையும் பெற்ற இயக்குனர் விஷ்ணுவரதன் இது குறித்து ஒரு பெட்டியில் பெருமையாக பேசி உள்ளார்.

பாலிவுட்டில் வெளியான ஷேர்ஷா திரைப்படத்தை கேப்டன் விக்ரம் பாத்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கியுள்ள அந்த திரைப்படத்தை ஜோஷர் தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா அவர்கள் தனது சிறப்பான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இரண்டாம் பாதியில்  ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விஷ்ணு வரதன் இந்த படத்திற்காக சிறந்த இயக்குனதற்கான பிலிம் பேர் விருதை தட்டிச் சென்றுள்ளார். மேலும் தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படத்திலேயே இந்த சாதனையை செய்து உள்ளார். மேலும்  இயக்குனர் விஷ்ணுவரதன் அவர்கள் சினிமாவில் பேர் போன இயக்குனர் மணிரத்தினம் மற்றும் ராமகோபால் வருமா, சந்தோஷ் சிவனை உள்ளிட்ட இயக்குனர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.