16 வருடம் கழித்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை.!

ajith actress

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை லைலா இவர் விஜயகாந்த் அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் இவர் நடித்த தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது இதனிடையில் ஈரான் நாட்டு தொழிலதிபரை காதலித்து 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்க போவதில்லை எனக் கூறினார். மேலும் பிதாமகன், கண்ட நால் முதல், உள்ளம் கேட்குமே ஆகிய திரைப்படங்களின் மூலம் பிரபலமடைந்த  நடிகை இவர்தான். இந்த நிலையில் 16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லைலாவை நடிக்க வைக்க  அணுகியுள்ளார் படக்குழு. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது முதலில் இந்த காட்சிக்கு சிம்ரனை படக்குழு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக அணுகி உள்ளது.

ஆனால் கொரோனா காலகட்டத்தில் தேதிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் சிம்ரன் கால்ஷீட் கிடைக்காமல் போனது இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக லைலா இருப்பார் என படக்குழு முடிவு செய்து அவரை அணுகியுள்ளது. லைலா கால்ஷீட் கிடைத்தவுடன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லைலா கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகிய திருப்பதி என்ற படத்தில் நடித்திருந்தார் அதுவும் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்தது 2006 ஆம் ஆண்டு தான் இதனால் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் களமிறங்குகிறார் என்பது ரசிகர்கலுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

மேலும் தற்பொழுது இவர் மும்பையில் தன்னுடைய கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மேலும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

laila
laila