தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவரும் தற்போது துணிவு, வாரிசு படங்களில் நடித்து வருகின்ற நிலையில் இவர்களுடைய படங்கள் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனால் விஜய், அஜித் படம் நீண்ட வருடங்கள் கழித்து மோத உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படமும் சரி நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் சரி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் தோல்வியடைந்து இருந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.
இந்த நிலையில் அஜித், விஜய் படங்கள் தோல்வியடைந்தாலும் நூறு கோடி குறையாமல் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது அது மட்டுமல்லாமல் இவர்களுடைய படங்கள் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்தாலும் நூறு கோடி சம்பளம் கொடுத்து வரும் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளித்த ஆர் கே சுரேஷ் ஒரு பேட்டியில் அஜித், விஜய் படம் என்றாலே சாட்டிலைட் உரிமை முதல் ஓடிடி நிறுவனம் வரை அவர்களுடைய திரைப்படங்கள் சராசரியாக 250 கோடி வரை அசால்டாக வசூலித்து வருகிறது. இப்படி படம் வெளியாவதற்கு முன்பாகவே 250 கோடி வசூலை வாரிக் கொடுக்கும் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு 100 கோடி கொடுப்பது ஒன்னும் தப்பாகாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் விஜயா, அஜித் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்று கொடுத்துதான் ஆக வேண்டும் என்று ஆர் கே சுரேஷ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.