தமிழ் சினிமா உலகில் எப்போதுமே நடிகர்களுக்கு இடையே போட்டி இருக்கும்.. அந்த வகையில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக அஜித், விஜய் இருவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டணத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர் மேலும் இவர்கள் நடிக்கும் படங்களை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு ஆகிய இரு படங்களும் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் எட்டு வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேராக அடுத்த வருடம் பொங்கலுக்கு மோத இருக்கின்றனர்.
இவர்கள் இருவரையும் ரசிகர்கள் மிகப்பெரிய ஒரு டாப் ஹீரோக்களாக பார்க்கின்றனர் ஆனால் அஜித் விஜய் வளர்ந்த சமயத்தில் நடிகர் சூர்யாவும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இவரை தற்போது அஜித் விஜய் உடன் ஒப்பிடுவதில்லை இதனால் அவர்களது இடத்தை பிடிக்க நடிகர் சூர்யா தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு..
தற்பொழுது பயணிக்கிறார் அதாவது நடிகர் சூர்யா இப்பொழுது பொது விழாக்கள், டிவி நிகழ்ச்சி போன்றவற்றை முற்றிலுமாக தவிர்ந்து வருகிறாராம் மேலும் தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் முக்கியமானவர்களுக்கு மட்டுமேதான் பயன்படுத்தும் புதிய நம்பரை கொடுத்திருக்கிறாராம்.
மேலும் பத்திரிகையாளர்கள் கண்ணிலும் படாமல் தற்போது தன்னைத் தானே அவர் வட்டத்தை போட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இது ஒர்க் அவுட் ஆனால் அஜித் விஜய் லெவலுக்கு சூர்யாவின் மார்க்கெட் உயர்வது மட்டுமல்லாமல் அவர்கள் இணையாக பேசுவார்கள் என கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் சூர்யா எடுத்துள்ள இந்த முடிவு ஒர்க் அவுட் ஆகுமா.? ஆகாதா.?