உங்க பையனுக்கு துப்பாக்கி படத்த வேணா காட்டுங்க ஆனா தப்பு தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க… சும்மா இருந்த அஜித் ரசிகர்களை சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்

kajal-agarwal

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருவர் காஜல் அகர்வால். இவர் ஆரம்பத்தில் தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் அதன் பிறகு தமிழில் பரத்துடன் இணைந்து பழனி என்ற படத்தின் மூலம் ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலே இவரது நடிப்பு மற்றும் அழகு சிறப்பாக இருந்ததால் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தி வந்தார்.

அந்த வகையில் இவர் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா, மாற்றான், துப்பாக்கி, மாறி, விவேகம் போன்ற பல படங்களும் நல்ல ஹிட் அடித்தது . ஒரு கட்டதில் தமிழை தாண்டி மற்ற மொழி படங்களையும் கைப்பற்றி ஓடிக் கொண்டிருந்த காஜல் அகர்வால் திடீரென அவரது நண்பரும், தொழிலதிபருமான கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வர இருவருக்கும்..

அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெரிதும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருவார். இப்படி குடும்ப வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தாலும் மறுபக்கம் சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் நான் என் மகனுக்கு 8 வயது வரை எந்த படமும் காட்டப் போவதில்லை,  அதன் பிறகு நான் காட்டப் போகும் முதல் படம் நான் நடித்த துப்பாக்கி திரைப்படம் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மற்றும் தப்பி தவறி கூட விவேகம் படத்தை காட்டி விடாதீர்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர். இதனை ப்ளூ சட்டை மாறன் டிவிட்டர் பக்கத்தில் வெளியீட்டு நக்கல் அடித்துள்ளார். இதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் செம காண்டில் இருக்கின்றனர்.

blue sattai maran
blue sattai maran