இரட்டை கதாபாத்திரத்தில் மிரட்டிய அஜித் – “வாலி” திரைப்படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vaali
vaali

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வந்தாலும் தான் சினிமாவை விட்டு மட்டும் விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார் இப்படி அவர் நடிக்கும்போது பல வெற்றி / தோல்வி படங்களை அவர் கொடுத்துள்ளார்.

ஏன் சினிமா உலகில் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அவருடைய உண்மையான  செயல்பாடு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார் அதற்கு ஏற்றார்போல ரசிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்ததை செய்து வருகிறார்.

அஜித். படங்களில் நடிப்பதையும் தாண்டி தான் செய்யும் ஒவ்வொரு செயலும் உண்மையாக இருக்க வேண்டும் அது தனது ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக படங்களில் டூப் இல்லாமல் நடிப்பதே துப்பாக்கி சூடு தாக்குதல் ட்ரோன் இயக்குதல் சமைப்பது கார் பைக் ரேஸ் நடித்து அசத்தி வருகிறார் மேலும் தனது நடிப்பை மேலும் மெருகேற்றி அசதி  வருகிறார்.

இப்ப கூட வலிமை திரைப்படத்தில் மிக கடினமாக உழைத்து நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து சூப்பர் ஹிட் திரைப்படம்  வாலி இதில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.

இந்த படத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கியிருந்தார் படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் அஜித்துடன் கைகோர்த்து சிம்ரன்,விவேக், ஜோதிகா, பாண்டு, லிவிங்ஸ்டன் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது.

இந்த படம் இப்பொழுது கூட அஜித் ரசிகர்களுக்கு பேவரைட் படமாக இருக்கிறது அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மிக சிறப்பாக இருக்கும் படம் இதுவரை வெளியாகிய 22 வருடங்கள் ஆகியுள்ளது இந்த நிலையில் வாலி படத்திற்காக அஜீத் அப்பொழுது வாங்கிய சம்பளம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. வாலி திரைப்படத்திற்காக அப்போது சுமார் 20 லட்சம் சம்பளம் வாங்கிய உள்ளாராம்