Actress Iswarya rai refused to act with Thala Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஆஞ்சநேயா, ஆழ்வார், பரமசிவன், தொடரும் போன்ற படங்களின் மூலமாக தோல்வியை சந்தித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் தோல்வியைக் கண்டு துவண்டு போகாமல் தனது கடின உழைப்பால் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. அவை காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், மங்காத்தா, பில்லா 2, போன்று தொடர்ந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் அஜித் அவரது ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார்.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கும்போது முதலில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயை கமிட் செய்து இருந்தனர், ஆனால் ஐஸ்வர்யாராயோ இவர் கூடலாம் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் தான் அப்பாஸ், மம்முட்டி போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் ஜோடியாக நடிப்பேன் என்றும் கூறிவிட்டார்.
அஜித்க்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்து உடனே கதையை மாற்றி ஐஸ்வர்யா ராயை அப்பாஸ் மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக போட்டார்களாம். பின் தபு வை அஜித்திற்கு ஜோடியாக மாற்றினர் கலாம்.மேலும் அப்போது அஜித் அவர்கள் அந்த அளவுக்கு பிரபலம் அடையாததால் சூட்டிங் ஸ்பாட்டில் அவரை யாரும் மதிக்க மாட்டார்களாம்.
இதை அறிந்த மம்முட்டி இயக்குனரிடம் ஒரு வளரும் நடிகரை இப்படியா நடத்துவது என்று கோபப்பட்டார். பின்னர் இயக்குனர் கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அஜித்திற்கு முக்கியத்துவம் கொடுத்தாராம். பின் கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா ராயை மம்முட்டிக்கு ஜோடியாக போட்டு படத்தை முடித்தார்கலாம்.
அண்மையில் ஐஸ்வர்யாராய் அவர்கள் ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த போது மணிரத்னத்தின் புதிய படத்தில் தான் நடிக்க போவதாக கூறியுள்ளார். அஜித் பற்றி பேசிய அவர் அஜித் மிகவும் நல்ல மனிதர் அவர் வெற்றியை பார்த்து தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை சந்திக்க நேர்ந்தால் வாழ்த்துக்களை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.