கே ஜி எஃப்-யை விட பல மடங்கு மாஸ் காட்சியில் அஜித்.! தெறிக்கவிடும் துணிவு படபோஸ்டர்…

thunivu

நடிகர் அஜித் அவர்கள் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து அதே தினத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால் இந்த இரண்டு திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி பேரும் என்று பலரையும் பதற வைக்கிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் அடுத்ததாக ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தற்போதும் கூறி வருகிறார்கள் துணிவு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வராத நிலையில் இருக்கும்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து வெளியான அப்டேட் பல நாட்களாக ஆகிவிட்டது.

thunivu
thunivu

இந்த நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகிய ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியின் புகைப்படம் செம மாசாக இருப்பதாக கூறபடுகிறது.

அந்த வகையில் அஜித் அவர்கள் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் படத்தில் வரும் யாஷ் துப்பாக்கி வைத்து நின்று கொண்டிருப்பார் அந்த காட்சியை போல் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த போஸ்டர்தான் சோசியல் மீடியாவில் ட்ரென்ட்டாகி வருகிறது.

thunivu

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் அவர்கள் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.