அஜித்திற்கு என்னாச்சு.? அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிற்க்கான காரணம்.?

ajith in hospital
ajith in hospital

தல அஜித் தற்போது தமிழில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில்  இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில்  விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வருகிறது.

தமிழில் விஜய் போலவே அஜித்திற்கும்  பெரிய அளவு ரசிகர்கள் இருப்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை.  சாதாரணமாகவே தல அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்றாலும் சமூக அக்கறை கொண்டவர். தன்னால் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுபவர்.

அதனாலேயே இவருக்கு ரசிகர் மன்றம் என்பது இருக்கக் கூடாது என கூறியவர். வருடத்திற்கு ஒரு படம் என நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் தல அஜித். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தல அஜித் சென்னையில் உள்ள பிரபல அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த தல ரசிகர்கள்  மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் அவருக்கு என்ன ஆச்சு என அச்சத்துடன் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கெட் வெல் சூன் அஜித்குமார் என பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து அஜித் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் அஜித் உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இது ஒரு வழக்கமான மருத்துவ பரிசோதனை என்றும் கூறியுள்ளனர். மேலும் தல தற்போது  ஷூட்டிங்காக அஜர் பைஜானுக்கு செல்ல உள்ளதால் இது சாதாரண ஒரு மருத்துவ பரிசோதனை தான் என கூறியுள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு பின்னார் தான் ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.