Ajith : தன்னுடைய நடிப்பு மற்றும் நடத்தையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளவர் நடிகர் அஜித் குமார் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக உடலையும் வருத்திக்கொண்டு வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார் அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சமூக அக்கறை கலந்த ஒரு ஆக்சன் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித் சூப்பராக நடித்து வருகிறார் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகிறதாம். த்ரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர் படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அஜித் சென்னை திரும்பிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரல் ஆகின..
இப்படிப்பட்ட அஜித்தை ரசிகர்கள் “தல” என செல்லமாக அழைத்து வந்தனர் ஆனால் திடீரென அஜீத் என்னை “தல” என்று கூப்பிடாதீர்கள் ஏகே அல்லது அஜித் என கூப்பிடுங்கள் அதுவே போதும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் அஜித் இவ்வாறு சொல்ல காரணமும் இருக்கிறதாம்..
அதாவது அஜித் நடிப்பில் வெளியான ஆஞ்சநேயா திரைப்படத்தில் அஜித்துக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் ஷாலினி தான் பணியாற்றினாராம். குறிப்பாக அந்த படத்தில் பாவாடை என்ற ஒரு பாடல் வரும் அந்த பாட்டில் அஜித் பிரிண்டட் போட்ட சேட்டையை அணிந்திருப்பார்.
அதில் ஏகே ஏன் பிரிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் அந்த சட்டையை ஷாலினி தான் டிசைன் செய்து கொடுத்தாராம் அதாவது அஜித்தை ஏகே என்று தான் ஷாலினி அழைப்பாராம் அதுதான் ஷாலினிக்கும் பிடிக்குமாம் அதனால் தான் அஜித் ரசிகர்களிடம் இனிமேல் ஏ கே என்று அழையுங்கள் என சொல்லி உள்ளாராம்..