நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடை பெற்றுள்ளது. அதனால் ஊரடங்கு முடிந்தவுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இரவாக மர்மநபர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்குமார் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அதுமட்டுமில்லாமல் விசாரணையில் விழுப்புரத்தை சேர்ந்த மர்ம நபர் தொலைபேசியில் அழைத்தது தெரியவந்துள்ளது, இவர் ஏற்கனவே விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்ததும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனையை முடித்துக் கொண்டார்கள்.