தானாகவே முன்வந்து அஜித் எங்களுக்கு செய்த உதவி..! பேட்டியில் மாரிமுத்து சொன்ன மாஸான தகவல்

Marimuthu
Marimuthu

Marimuthu speech Ajith :வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மாரிமுத்து. இவர் அஜித்தின் வாலி, விஜய்யின் பைரவா, ரஜினியின் ஜெயிலர், விஷாலின் மருது என பல டாப் நடிகரின் படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களின் நடித்து பெயரை பெற்றவர் இப்படிபட்ட இவர் இயக்குனராகவும் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வெள்ளி திரையில் மாஸ் காட்டிய மாரிமுத்து சின்ன திரையிலும் கவனம் செலுத்தினார் பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு விளையாடிய மாரிமுத்து சன் டிவியில் எதிர்நீச்சல் என்னும் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியலில் பல முன்னணி பிரபலங்கள் நடித்தாலும் இவருடைய கதாபாத்திரம் தான்..

வெயிட்டான கதாபாத்திரம் இவர் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்ததால் எதிர்நீச்சல் சீரியல் டாப் இடத்திற்கு முன்னேறியது மேலும் இந்த சீரியலை பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது தொடர்ந்து நல்லபடியாக எதிர்நீச்சல் சீரியளில்  நடித்து வந்தார் இன்று எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பணிக்காக போயிருந்தார்.

அப்பொழுது சற்று நெஞ்சு வலிப்பது போல் இருந்ததால் உடனடியாக நான் மருத்துவமனைக்கு போகிறேன் என கூறிவிட்டு தானே காரை எடுத்துக்கொண்டு  சென்று உள்ளார் சிறிது நேரம் ஆகியும் எதுவும் தெரியாததால் உடனேயே அங்கு இருந்த சக நடிகர் கமலேஷ் மாரிமுத்துவின் மகளுக்கு போன் செய்து என்ன விஷயம் என கேட்க அப்பொழுதுதான் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை இவர்களுக்கு தெரிந்ததாம்..

விஷயத்தை கேள்விப்பட்ட எதிர்நீச்சல் குழு தொடங்கி சினிமா பிரபலங்கள்  மற்றும் மக்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள்  twitter பக்கத்தில்  போட்டோவை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மாரிமுத்து பேசியது வைரலாகி வருகிறது. அஜித்துக்கு எனக்கும் நிறைய பந்தம், உறவு இருக்கிறது.

அஜித்தின் ஆரம்ப கால படங்களில் நான் நபருடன் பணியாற்று இருக்கிறேன் அவர் ரொம்ப நல்ல மனிதர். எதையுமே வெளிபடையாக பேசிய கூடியவர். என் மகனை பத்தாவது  வரையும் படிக்க வச்சது அவர்தான் அவரை பலர் நல்ல மனிதர்கள் என்று சொல்லுகின்றார்கள் உண்மையில் அவர் ரொம்ப நல்ல மனிதர் என பேசி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.