Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார் இந்த நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
ஆனால் கார் டிரைவர் அஜித் இல்லை என நினைத்து ஒருவரிடம் அஜித்தை பற்றி தப்பாக பேசிவிட்டார். இதை தெரிந்து கொண்ட அஜித் உடனே அந்த கார் டிரைவரை அழைத்து ஆறு மாச சம்பளத்தை கொடுத்து அவரை வேலையில் விட்டு தூக்கி விட்டார். ஒரு நாள் போலீஸ் சைடுல இருந்து அஜித்திற்கு போன் வருகிறது.
உங்கள் வீட்டில் வேலை பார்த்த நபர் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அவர் காவல் நிலையத்தில் இருப்பதாக சொல்லி உள்ளனர் உடனே அஜித் மேனேஜரை கூப்பிட்டு அது என்ன விஷயம் என்று பாருங்கள் என கூறியுள்ளார் விசாரித்த பொழுது அஜித்திடம் வேலை பார்க்கும் சமயத்தில் நமக்கு சம்பளம் வருகிறது.
எப்படியும் கடனை அடைந்து விடலாம் என வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார். ஆனால் அஜித்துடன் ஏற்பட்ட சண்டையால் அந்த வேலை போய்விட்டது. இதனால் அந்த கடனை அவர் செலுத்த முடியாததால் போலீஸ் அவரை பிடித்ததாக கூறப்படுகிறது.
இதை தெரிந்த அஜித் உடனடியாக அவர் வாங்கிய வங்கி கடனாக 7 லட்சம் ரூபாய் கட்டியுள்ளார் இது குறித்த அவர் பேசும்பொழுது என்னை பற்றி தவறாக பேசியதால் நான் அவரை வேலையை விட்டு நீக்கி விட்டேன் ஆனால் அவர் என்னை நம்பி கடன் வாங்கி இருக்கிறார் அப்படியானால் அந்த கடனுக்கு நான் தான் பொறுப்பு என சொல்லி சொல்லியிருந்தார்.