தமிழ் சினிமாவில் தன்னுடைய முயற்சியினால் வளர்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கூட சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்விகளையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார்.
இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமானாலும் தகவலும் வெளிவரவில்லை ஆனால் தல ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றியையும் பிரபலத்தையும் தந்தது. அந்த வகையில் ஒரு படம் தான் உல்லாசம். 1997ஆம் ஆண்டு இயக்குனர் ஜே.டி.ஜெரி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இந்த படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றுதான் கூற வேண்டும்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மகேஸ்வரி நடித்த ஆ.ப.க.லி நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் கார்த்திக் ராஜா இசையமைக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சேயர் பாலு தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் உல்லாசம் திரைப்படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமான அதற்குப் பிறகு இயக்குனர் இந்த படத்தில் நடிகர் விக்ரமை நடிக்க வைக்கலாமா என கேட்டுள்ளார் அதற்கு சரியென கூறியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கேரக்டருக்கு நிகராக விக்ரமின் நடிப்பு இருக்க வேண்டும் என அஜித் இயக்குனரிடம் கூற இதனை தெரிந்துக் கொண்ட விக்ரம் சினிமாவில் பல துரோகங்களை சந்தித்து இருக்கிறேன் ஆனால் இவ்வாறு நீங்கள் கூறியது மிகவும் மகிழ்ச்சி எனக் கூற அதற்கு நானும் பல தடைகளை சினிமாவில் சந்தித்திருப்பதாக அஜித்தும் கூறினாராம்.
எனக்கு என்ன முக்கியத்துவம் கொடுகிரீங்கலோ அதே முக்கியத்துவம் விக்ரமுக்கும் கொடுங்கன்னு அஜித் டைரக்டர் கிட்ட கண்டிசன்ன சொல்லிட்டாரு..
விக்ரமுக்கு கடவுள் உருவத்தில் அஜித்குமார்#Ajithkumar pic.twitter.com/rXy7VXze8V
— Suresh AK ™ (@Suresh_Ak13) March 3, 2023