சத்தமே இல்லாமல் அஜித் செய்த செயல்.! வாயடைத்துப் போன H வினோத் தல எப்பொழுதும் வேற லெவல் தான்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித் இவருக்கு சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் வசூலில் கல்லா கட்டி வருகிறது. அதுவும் கடந்த வருடத்தில் வெளியாகிய விஸ்வாசம் படம் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்தநிலையில் தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரசிய தகவலை வினோத் தனது நண்பர்களுடன் கூறி பெருமை அடைந்துள்ளார்.

தல அஜித் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்  அந்த விடுதியில் தொலைபேசி சரியாக வேலை செய்யவில்லை அதை சரி செய்ய வந்த நபர் சரி செய்து விட்டு அஜித்துடன் டிப்ஸ் கேட்டுள்ளார். அதற்கு அஜித் உங்களுக்கு தான் சம்பளம் தருகிறார்கள் பின் ஏன் அதிகமாக பணம் கேட்கிறீர்கள் என அறிவுரை கூறி அனுப்பி உள்ளார்.

ஆனால் பின்பு வினோத்திடம் அவர் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க சொன்னார் அஜித் அப்பொழுது அந்த டெலிபோன் ரிப்பேர் செய்தவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களின் ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் அவர் திண்டாடியது தெரியவந்துள்ளது பின்பு உடனடியாக அஜித் அவரின் குழந்தைகளுக்கு பீஸ் கட்ட பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இப்படி அஜித் பல நன்மைகளை யாரிடமும் கூறாமல் செய்து வருவது அனைவரும் அறிந்ததே இதைப்பற்றி வினோத் தனது நண்பர்களிடம் கூறி பெருமை அடைந்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version