அள்ளி அள்ளிக் கொடுப்பது என்றால் அது அஜித் மட்டும் தான்.! கடனில் மூழ்கிய பத்திரிகையாளருக்கு என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

ajith-help-tamil360newz
ajith-help-tamil360newz

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் தல அஜித் எந்த ஒரு ரசிகர் மன்றமும் தனக்கு வேண்டாம் என கூறியவர், தன்னுடைய ரசிகர்கள் நலனுக்காக தான் ரசிகர் மன்றத்தையே கலைத்தார், சமீபகாலமாக தல அஜித்குமார் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கூட கலந்து கொள்வதில்லை ஆனால் உதவி என வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்.

தல அஜித் இந்த உச்சத்தை அடைவதற்கு யார் உதவியும் நாடாமல் முட்டிமோதி தன்னுடைய திறமையாலேயே வளர்ந்தார், அதேபோல் அஜித் ஒரு உதவி செய்கிறார் என்றால் அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார் அந்த அளவுக்கு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூப் சேனலில் இதுவரை அஜித் செய்த ஒரு மிகப்பெரிய உதவியை பற்றி கூறியுள்ளார் அது என்னவென்றால்” என் நண்பர் ஒருவர் அஜித்தை பேட்டி காண சென்றுள்ளார் அப்பொழுது என் நண்பரின் முகம் வாடி இருப்பதை அஜித் கண்டுள்ளார், உடனே அஜித் உங்களுக்கு ஏதோ பிராப்ளம் இருக்கு என நினைக்கிறேன் அது என்னன்னு சொல்லுங்க என கேட்க அந்த பத்திரிக்கையாளர் அதெல்லாம் ஒன்றுமில்லை நாம பேட்டிக்கு போகலாமா என சொல்ல இல்லை இல்லை நீங்கள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறீர்கள் அது என்ன என்று கூறுங்கள் என அஜீத் மீண்டும் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பத்திரிக்கையாளர் இல்லிங்க சார் இல்லை என மழுப்பி யுள்ளார் உடனே அஜித் விடாமல் கேட்டுள்ளார் பின்பு அந்த பத்திரிக்கையாளர் சில மாதத்திற்கு முன் நான் இரண்டு லட்சம் கடன் வாங்கி இருந்தேன் அது வட்டி மேல் வட்டி போட்டு இப்பொழுது வட்டியும் அடைந்ததில்லை அசலும் அடைந்த பாடு இல்லை என கூறியுள்ளார், உடனே அஜித் அவரிடம் அந்த பைனான்ஸ் நம்பர் கொடுங்க நான் பேசுகிறேன் என கூறியுள்ளார்.

அவரும் நம்பர் கொடுக்க உடனே கால் செய்து நான் அஜித் பேசுகிறேன் எந்த மாதிரி ஒருத்தர் கிட்ட கடன் கொடுத்தீர்கள் அவரால் வட்டியும் அசலும் கொடுக்க முடியவில்லை நான் மாலை ஆபீஸ்ல தான் இருப்பேன் நீங்கள் அந்த வட்டி கணக்கு என்னவோ அதைக் கொண்டு வாங்க நான் கொடுக்கிறேன் என கூறிவிட்டாராம்.
உடனே அந்த பத்திரிகையாளர் தலைகால் புரியாமல் அஜித்தை கட்டி பிடித்து அழ ஆரம்பித்து விட்டாராம் உடனே அந்த பைனான்சியர் அங்கு வந்துவிட்டார் வந்தவர் தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு அந்த பத்திரிகையாளரின் பத்தரத்தை கொடுத்துவிட்டு சென்றாராம், இவ்வாறு அந்த யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

தான் வாங்கிய கடனை யார் தலையில் கட்டலாம் என யோசித்துக் கொண்டே இருக்கும் இந்த காலத்தில் யாரோ முகம் தெரியாத பத்திரிக்கையாளர் ஒருவரின் கடனைத் தீர்த்து வைத்த அஜித்தை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள், இந்த மனசு யாருக்கு வரும் அள்ளி அள்ளிக் கொடுப்பதில் அஜித் தான் என பலரும் கூறுவது உண்மைதான்.