பிரபலங்களுக்கு அஜித் போட்ட அதிரடி கண்டிஷன்.! அப்போ வலிமை பர்ஸ்ட் லுக்.? சோகத்தில் ரசிகர்கள்.!

ajith HBD-tamil360newz

தல அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதியை மிகவும் விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள் ரசிகர்கள். தல அஜித்தின் பிறந்த நாளை சமூக வலைத்தளத்தில் தெறிக்க விட திட்டமிட்டார்கள் அஜித் ரசிகர்கள், அதே போல் பல பிரபல நடிகர்களும் காமன் டிபியை இன்று மாலை வெளியிட திட்டமிட்டார்கள்.

பல நடிகர்கள் இந்த டிபியை வெளியிட இருந்தார்கள். ஆனால் அஜித் அவர்கள் ஒவ்வொருவருக்கும் போன் கால் செய்தது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தடை போட்டுள்ளது. தல அஜித்தின் டிபிஐ பிரபல நடிகரான சாந்தனு ஆதவ் கண்ணதாசன், அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், பிரேம்ஜி, ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், நிதி அகர்வால், ஆர்த்தி ராகுல் தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம் ஆகியவர்கள் வெளியிட இருந்தார்கள்.

ஆனால் கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் முழுவதும் 2 லட்சம் மக்கள் இறந்துள்ளார்கள் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள், அதே போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அதனால் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் அதனைத் தொடர்ந்து அஜித்தும் தற்போது தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.

காமன் டிபியை வெளியிட இருந்த பிரபலங்களுக்கு அஜித் அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவருக்கும் போன்கால் வந்துள்ளது அப்பொழுது தனது பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிடுவது கொண்டாடுவது என அனைத்தையும் தயவு செய்து யாரும் செய்ய வேண்டாம் என அஜித் கேட்டுக்கொண்டதாக அஜித் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

தல அஜித்தின் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள் அஜித்தே இப்படிக் கூறிய பிறகு காமன் டிபி கண்டிப்பாக வெளியாகாது என ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார் கள், தல அஜித்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு இப்படி ஒரு பிரம்மாண்ட பிளான் போட்டு அஜித் ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆக இருக்கிறார்கள், இருந்தாலும் தல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி சமூக வலைதளத்தை நிரப்பி விடுவார்கள் ரசிகர்கள்.

அதேபோல் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள், ஆனால் அஜித்தின் காமன் டிபியை வெளியிட மறுத்த தல அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மட்டும் எப்படி இந்த சமயத்தில் வெளியிட அனுமதிப்பார் கண்டிப்பாக வெளிவராது என ரசிகர்கள் கொஞ்சம் மன வருத்தத்தில் இருக்கிறார்கள்.