Marimuthu speak about ajith, vijay : சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் மாரிமுத்து. சின்னத்திரையில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அந்த சீரியலை மிகப் பெரிய அளவில் உயர்த்தினார். மறுபக்கம் வெள்ளி திரையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் வில்லனுக்கு ஆலோசனை சொல்லும் நபராக நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கமலின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் இன்று எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பேச சென்று உள்ளார் அப்பொழுது நெஞ்சுவலிப்பது போல் இருந்ததால் வெளியே காத்து வாங்கப் போகிறேன் என சொல்லிவிட்டு போன அவர் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து மாரிமுத்துவின் மகளிடம் தொடர்பு கொண்ட போது செய்தி வெளிவந்ததாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்த கமலேஷ் தெரிவித்தார். மாரிமுத்து இறந்ததை கேட்டு எதிர்நீச்சல் குழு சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வர முடியாதவர்கள் சமூக வலைதளக்க பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் மறைந்த மாரிமுத்து அஜித், விஜய் பற்றி பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.அஜித் பற்றிய அவர் பேசியது அடுத்தவர் செய்யும் கெட்டதை மறந்து விடுவார் அஜித். கோபம் வந்தால் பேசி விடுவார் ஆனால் அதையே மனதில் வைத்துக் கொண்டு செயல்பட மாட்டார் யாராவது கெட்டது செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவர்களிடம் சிறிது பேசுவார் அதுதான் அவரின் குணமாக உள்ளது.
ஆனால் நடிகர் விஜய் அஜித் மாதிரி இல்லை.. அவருக்கு யாராவது கெட்டது செய்தால் அது எத்தனை நாள் ஆனாலும் மறக்கவே மாட்டார் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை கூட மறக்க மாட்டார் அதை ஓரிரு நாட்களில் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுவார் விஜய் எதையும் திட்டமிட்டு செய்வார். படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வந்து விடுவார், யாரையாவது அடிக்கும் அளவிற்கு கோபம் இருந்தாலும் அவரிடம் சிரித்து முகமாக பேசிக் கொண்டிருப்பார் என பேசி உள்ளார்.