Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினாலும் போக போக படங்கள் சுமாராக ஓடின இதிலிருந்து வெளிவர ஆக்சன் படங்களை தேர்வு செய்தார்.
அப்படி இவர் நடித்த அமர்க்களம், தீனா, மங்காத்தா, பில்லா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை அதிகமாக உருவாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் இப்பொழுது வரை அந்த இடத்தை விட்டு இறங்காமல் இருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு..
பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கின்றன இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அம்பிகா நடிகர் அஜித் குறித்து பேசி உள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால்.. நான் அஜித்துடன் உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். அமர்க்களம் படத்தின் போது தான் ஷாலினிக்கும், இவருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகியிருந்தது. ரொம்ப நல்ல மனிதர்.
ஒரு குழந்தைக்கு ஆபரேஷனுக்கு காசு வேணும் என நியூஸ் பேப்பர்ல போட்டு இருந்ததை பாத்துட்டு உடனே தன்னுடைய மேனேஜருக்கு போன் பண்ணி இந்த நியூஸ் பேப்பரில் இருக்கும் அந்த குழந்தைக்கு பணத்தை கொடுத்து உதவுங்க என கூறினார் இதனை நான் அவர் அருகில் இருந்து கேட்டேன் என அம்பிகா சொல்லி உள்ளது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.