Ajith : ரஜினி, கமலுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரண்டு நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் கடைசியாக அஜித் நடித்த துணிவு விஜய் நடித்த வாரிசு இரண்டு திரைப்படங்களும் கடந்த பொங்கலுக்கு கோலாகலமாக வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவோ வெற்று கண்டது.
அதனைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தனது 68 வது படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார். மேலும் தளபதி விஜய் சினிமாவையும் தாண்டி அரசியலில் இறங்குவதற்கான வேலைகளை பார்த்து வருகிறார் ஆம் தொடர்ந்து தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் ரசிகர்களின் அனைவரையும் அழைத்து பனையூரில் அடிக்கடி மீட்டிங் போட்டு வருகிறார்.
ஆனால் அஜித் சினிமாவையும் தாண்டி தன்னுடைய ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் துப்பாக்கி சுடுதலை தொடர்ந்து தற்பொழுது பைக் பிரியர்களுக்காக ஒரு நிறுவனத்தையும் அஜித் தொடங்கியுள்ளார் மேலும் சில நிறுவனங்களையும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் பேட்டி ஒன்றில் வலைப்பேச்சுஅந்தணன் அஜித், விஜய் பற்றி பேசியுள்ளார்.
அஜித் களத்தில் இறங்கினால் அவர்தான் நம்பர் ஒன் ஆனால் விட்டுக் கொடுத்து போகிறார் என கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த அந்தணன் விஜய் ரசிகர்களை காட்டிலும் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும், இன்னும் வெறிபிடித்த ரசிகர்கள் அஜித்திற்கு அதிகமாகவே இருக்கிறார்கள்.
மேலும் பேசிய அவர் அஜித்தை பற்றி தப்பு தப்பாக பேசி வரும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனே ஒரு பேட்டியில் அஜித்துக்கு தான் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கு என சொல்லி உள்ளார் அவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும் என அந்தணன் பேசியது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.