தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அதிகப்படியான ஆண் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார் இவர் அண்மைக்காலமாக நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இப்பொழுது கூட தனது 61 வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இறுதி கட்டப் பட பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் செல்ல இருக்கிறது அதற்கு முன்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ரிலீஸ் செய்தது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் திரை உலகில் ஒரு சுறுசுறுப்பான நடிகராக இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதாவது காலையில் சூட்டிங் ஆரம்பித்து நைட் இரண்டு மணி மூணு மணி ஆனாலும்..
அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருந்து நடித்துக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் சூட்டிங் முடியும் வரை அங்கேயே இருப்பார். மறுநாளும் சீக்கிரமாகவே வந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம் இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்குமாம். எப்படி அஜித் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என நினைப்பார்களாம். அதற்கு காரணமும் இருக்கிறதாம்.
அஜித்திற்கு 24 மணி நேரமும் டீ இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அதை குடித்துக் கொண்டே இருப்பார் என்று கூறப்படுகிறது எப்பொழுதும் சுறுசுறுப்பு வேண்டும் சோர்வாக இருந்து விட்டால் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் என்பதால் தனது துவக்க காலத்தில் இருந்து இந்த பழக்கத்தை வைத்திருக்கிறாராம்.. இப்பொழுதும் இந்த பழக்கத்தை விடாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன..