தல அஜித் சினிமா உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அத்தகைய படங்கள் வெற்றி தோல்வி அடைகின்றன. இது சினிமா உலகில் நடக்கின்ற சகஜமான ஒன்றுதான்.
இருப்பினும் அத்தகைய படங்களுக்காக தனது கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தக் கூடியவர் தல அஜித் இப்படி சினிமா உலகில் தான் அவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திவர் இல்லை.
நிஜத்தில் அதை விட பலமடங்கு நேர்மை குணம் கொண்டவராகவும் இருந்து வருகிறார்.இவர் சினிமாவுலகில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவ்வப்போது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அதனை நாம் நேரில் பார்த்தது கிடையாது அதனால் அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் பலரும் மீடியாக்களில் கூறியதை நாம் கூர்ந்து கவனித்து உள்ளோம்.அதுபோல தற்போது பிரபல அரசியல்வாதியான அமர் பிரசாத் ரெட்டி அவர்கள் தல அஜித் அவர்கள் அண்மையில் 10 மாற்றுத்திறனாளிகள் வெளிநாட்டில் விளையாட பல நலத்திட்ட உதவிகளை செய்து உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இத்தகைய வாசகத்தை பதிவிட்டு பின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அத்தகைய செய்தி ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்துள்ளது. மேலும் அவர் அஜித் தோற்றத்தில் மட்டுமில்ல குணத்திலும் பால் போல் வெள்ளை மனம் கொண்டவர் என கூறினார்.
நடிகர் #அஜித் தோற்றத்தில் மட்டுமல்ல குணத்திலும் பால்போல் வெள்ளை மனம் கொண்டவர். நான் தமிழக மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தில் தலைவராக இருந்த இரண்டு வருடங்கள் சுமார் 10மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உதவி செய்தார்.அவரை ஏளனமாகப் பேசுவது தவறு@SureshChandraa pic.twitter.com/2vVhlN9F80
— Amar Prasad Reddy?? (@amarprasadreddy) September 18, 2020