துணிவு திரைப்படத்திலேயும் அஜித் இதை செய்துயுள்ளார் – வெளிப்படையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்..!

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர்  அதிக தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும், அண்மை காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அஜய், மகாநதி சங்கர், ஜான்..

மற்றும்  பிக் பாஸ் பிரபலங்களான சிபி, அமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

படம் அடுத்த வருடம் பொங்கலை குறிவைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது ஆனால் அதற்கு முன்பாக ரசிகர்களையும், மக்களையும் சந்தோஷப்படுத்த அடுத்த அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது இதுவரை இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் அடுத்ததாக முதல் பாடலையும் வெளியிட இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது இந்த சமயத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக துணிவு திரைப்படத்தில் பைக் சீன்கள் இருக்கிறதா.? என கேட்டுள்ளனர் அதற்கு அவர் கண்டிப்பாக இருக்கிறது என சொல்லி உள்ளார். இந்த செய்தியை தற்போது தல ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.