தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் அஜித் மற்றும் விஜய் இந்த நிலையில் இவர்கள் அப்பொழுதைய காலக் கட்டங்களில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்களாக இருந்து வந்தார்கள். ரஜினி கமலுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர் கூட்டத்தையும் பெற்றுள்ளார்கள் அஜித் மற்றும் விஜய் மேலும் இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள்.
அதேபோல் பாக்ஸ் ஆபீஸில் இவர்களின் திரைப்படம் மாறிமாறி சாதனைகளை செய்து வரும். ஆரம்ப காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர் திரைப்படத்திலும் ஒன்றாக நடிக்க இருந்தார்கள் ஆனால் படத்திலிருந்து அஜித் திடீரென விலகிவிட்டார் அஜித்தின் திரை படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அதனை அஜித் மறுத்துள்ளது குறித்து ராஜ்குமார் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ராஜ்குமார் இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார் இந்த நேரத்தில் 1999 ஆம் ஆண்டு நீ வருவாய் என என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்கிய பல திரைப்படங்களில் தேவயாணி தான் கதாநாயகி ஆக நடித்துள்ளார்.
ராஜ்குமார் அவர்கள் 2001 ஆம் ஆண்டு தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ராஜ்குமார் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் நீ வருவாய் என திரை படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்களை பற்றி பேசியுள்ளார். நீ வருவாய் என திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு விஜய்யிடம் தான் பேசப்பட்டது.ஆனால் அப்பொழுது விஜய் கால்ஷீட் கிடைக்காததால் விஜய் கெஸ்ட் ரோலில் பண்ணுரேன் என கூறிவிட்டார்.
அதன்பிறகுதான் அஜீத்திடம் மெயின் ரோல் பண்ண கேட்டோம் ஆனால் அஜித் மறுத்துவிட்டார் இந்த நிலையில் அதற்கு அஜித் சார் சொன்னது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அஜித் சொன்னதாவது பொதுவாக ஹீரோயின் ஹீரோவை கடைசிவரை பிடிக்கலை என்று சொன்னால் அது நன்றாக இருக்காது மௌனராகம் திரைப்படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்து இருந்தார் படத்தில் ரேவதி கடைசிவரை மோகனை வேண்டாம் வேண்டாம் என சொன்னதால் அந்த திரைப்படத்திற்கு பிறகு மோகனுக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.
ஆனால் அந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தான் கார்த்திக் வந்து சென்றார் கார்த்திக் மார்க்கெட் குறையாமல் அதிகரித்தது அதனால் மெயின் ரோலில் நான் பண்ணமாட்டேன் விஜய் சாருக்கு தைரியமிருந்தால் பண்ண சொல்லுங்க என்று கூறினார். பிறகுதான் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார் பார்திபன் மெயின் ரோலில் நடிப்பதற்கு அணுகிய பிறகு அதற்கு ஒப்புக்கொண்டார். அந்த வகையில் பார்த்திபன் மெயின் ரோலிலும் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது நீவருவாயன திரைப்படம்.