இன்று உலகம் முழுவதும் இருக்கும் காதலர்கள் ப்ரொபோஸ் டேவை கொண்டாடி வருகின்றனர் அதாவது காதலர் வாரத்தில் நான்காவது நாளான இன்று பிராமிஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் அஜித் தன்னுடைய காதல் மனைவி ஷாலினிக்கு முக்கியமான சத்தியம் ஒன்றை செய்துள்ளார் அது குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ப்ராமிஸ் தினத்தில் பலரும் தங்களுடைய காதலர்களுடன் ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தை வைத்து பிராமிஸ் வாங்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் ஷாலினிக்கு வாக்குறுதி கொடுத்த நிலையில் பல ஆண்டுகளாக அதனை அஜித் கடைப்பிடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக அஜித்-ஷாலினி விளங்கி வருகிறார்கள். இவர்களுடைய காதல், அன்பு போன்றவை பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இவர்கள் இருவரும் 1999ஆம் ஆண்டு வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பிறகு அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அஜித் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஷாலினி திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அந்த வகையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்பு தன் காதல் மனைவி ஷாலினிக்கு கொடுத்த சத்தியத்தை நடிகர் அஜித் தற்போது வரையிலும் காப்பாற்றி வருகிறாராம்.
அதாவது தற்பொழுது வந்துள்ள தகவலின் படி தன்னுடைய திருமணத்திற்கு முன்பு ஷாலினி அஜித்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒப்பந்தம் செய்யக்கூடாது மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படத்திற்கு செலவிட வேண்டும் மீதம் குடும்பத்திற்கான நாட்கள் என அஜித்திடம் ஷாலினி கதாராக கூறி சத்தியமாக உள்ளார்.
எனவே அஜித்தும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு தான் முதலிடம் என இப்பொழுது வரையிலும் அந்த வாக்குறுதியை கடைப்பிடித்து வருகிறார். இப்படி ஒரு உண்மையான தகவலை அஜித்தே கடந்த காலத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்காது. தற்பொழுது அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சிறிது இடைவெளை எடுத்து தன்னுடைய மனைவியுடன் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஷாலினியும் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.