மனைவிக்கு கொடுத்த வாக்கை.. 23 வருடமாக நிறைவேற்றி வரும் அஜித்.! மனுஷன் வேற லெவல்

ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் அஜித்குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் பட்டிதொட்டி ஏங்கும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது.

இதுவரை மட்டுமே 260 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது. வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார்.  இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதையை பிடிக்காததால்..

அவரை தூக்கிவிட்டு தற்பொழுது மகிழ் திருமேனியை இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நடிகர் அஜித்குமார், ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரு தடவை ஷாலினி அஜித்துக்கு ஒரு கோரிக்கை வைத்தார் அதாவது திருமணத்திற்கு பிறகு ஒரே நேரத்தில்  ஒன்றுக்கும் வேறுபட்ட திரைப்படங்களில்  ஒப்பந்தம் செய்யக்கூடாது மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே படத்திற்கு செலவிட வேண்டும் மீதி இருக்கின்ற 15 நாட்கள் நீங்கள் குடும்பத்திற்காக ஒதுக்க வேண்டும் என அஜித்திடம் கராராக சத்தியம் வாங்கிக்கொண்டாராம்..

அன்றிலிருந்து இன்று வரை அஜித் தனது குடும்பத்திற்கு அதிகம் கவனம் செலுத்துவாராம்.. ஏன் துணிவு திரைப்படத்தின் வெற்றியை கூட அவர் பெரிசாக கொண்டாடாமல் தனது குடும்பத்துடன் போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று வந்தார் அந்த புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.