இன்று பல நடிகர் மற்றும் நடிகைகள் மரம் நடலாம் ஆனால் இதற்கெல்லாம் விதையாக இருந்தது தல அஜித் தான்.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்.!

ajith-cinema-news
ajith-cinema-news

ajith Latest old photos : தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடித்த திரைப்படங்கள் சமீபகாலமாக வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன, இந்தநிலையில் அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே போகிறது.

இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளின் பொழுது மரம் நட்டு அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு சவால் விட்டார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி அதிக லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது.

அந்த சவாலை ஏற்ற விஜய் மரங்களை நட்டு அதைப் புகைப்படமாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார் அந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக வருகின்றன, இந்த நிலையில் இதைப் பார்த்த தல ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

பல நடிகர்கள் இன்று மரம் நட்டு புகைபடத்தை வெளியிட்டு வருகிறார்கள், ஆனால் இதற்கெல்லாம் விதையாய் இருந்தது தல அஜித் தான், தல அஜித் பல வருடங்களுக்கு முன்பு மரக்கன்றுகளை நட்டுள்ளார் அந்த புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.