நடிகர் அஜித்குமார் தன்னுடைய சக டிரைவர் சுகத் என்பவருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக வழங்கி உள்ளார். துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இதனை அடுத்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். பல மாதங்களாக இந்த படத்தின் அப்டேட்டுகள் வெளியான நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் விடா முயற்சி என பெயர் வைக்கப்பட்டது மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இதனை அடுத்து நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் பைக் ரைட் அஜித் குமார் செய்த நிலையில் பலரும் அவரை அங்கு அடையாளம் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் ரசிகர் ஒருவர் அவரை பின் தொடர்ந்த நிலையில் அஜித் ஷெஃப் உடையில் சமைத்தது, பல இடங்களில் மின்னல் வேகத்தில் ரைடு செய்தது போன்ற பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இவ்வாறு இதனை அடுத்து அஜித் முதல் கட்ட சுற்றுப்பயணம் வீடியோவாக பதிவு செய்யப்பட இருப்பதாகவும் அது ஆவணப்படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஆவண படத்திம் நெட்ஃபிலிக் தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது எனவும் கூறி வருகின்றனர் இதன் காரணமாக விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தற்பொழுது அஜித் பைக் ரைட் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இதனை ஏகே மோட்டோ ரைட் என்ற மோட்டார் சைக்கிள் என்ற சுற்றுலா நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய சக டிரைவர் சுவத் என்பவருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான BMW F 850 GS என்ற ரக பைக்கை வாழங்கியுள்ளார்.