தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மை காலமாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வசதி வருகிறார். இப்பொழுது கூட தனது புதிய திரைப்படமான துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் படத்தின் ஷூட்டிங் அனைத்தும் முடிந்த நிலையில் தற்பொழுது டப்பிங் நோக்கியே பயணித்துள்ளது.
அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வெளிவந்தன இப்படி இருக்கின்ற நிலையில் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் பற்றிய புதிய மற்றும் பழைய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி ஒரு தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது ஸ்ரீஜா ரவி என்பவர் அஜித் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஸ்ரீஜா ரவி பேசியது : ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் கொடுத்த டப்பிங் பற்றியும் அதன் பின் பிரியாத வரம் திரைப்படத்தில் கொடுத்த டப்பிங் பற்றியும் பகிர்ந்து கொண்டார்..
மேலும் பேசிய அவர் அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினியும் அஜித்தும் ஒன்றாக நடித்திருந்தனர் இந்த திரைப்படத்தில் ஷாலினிக்கு டப்பிங் கொடுத்துவிட்டு வெளியே வந்த ஸ்ரீஜா ரவி அஜித்தை சந்தித்துள்ளாராம் அப்பொழுது பேசிய அஜித்து எனது மனைவி ஷாலினிக்கு நீங்கள் நன்றாக டப்பிங் கொடுத்தீர்கள் நன்றி அண்ணா என தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்..
அந்த சமயத்தில் அஜித்திற்கும் ஷாலினிக்கும் திருமணம் ஆகவில்லை ஆனால் மனம் முடிப்பதற்கு முன்பாகவே அஜித் ஷாலினியை மனைவி எனக் கூறியது தனக்கு இன்றும் பூரிப்புடன் இருப்பதாக தெரிவித்தார் திருமணத்திற்கு முன்பு பலரும் காதலி என சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அஜித் மனைவி என்று சொன்னது தன்னை பிரமிப்படைய வைத்ததாக ஸ்ரீஜா ரவி தெரிவித்தார்.
மேலும் அவர் சொன்னது அஜித்தின் காதல் கோட்டை திரைப்படத்தில் அஜித்துடன் ஒன்றாக இணைந்து தேவயானிக்கு தான் டப்பிங் கொடுத்ததாகவும் அப்பொழுது அஜித் எப்படி அமைதியாக மரியாதையாக உள்ளாரோ இன்றும் அப்படியேதான் உள்ளார் என அவர் பேட்டியில் கூறினார்.